தர்மசக்கர ஆடை விவகாரம்: பாத்திமா மசாஹிமாவின் கைது சட்டவிரோதமானது; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Date:

தர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட   பாத்திமா மசாஹிமாவின் கைதும், தடுத்து வைப்பும் சட்டவிரோதமானது என, உயர் நீதிமன்றம் இன்று (30) புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

அத்துடன் மசாஹிமாவின் அடிப்படை உரிமை, அரசினால் மீறப்பட்டுள்ளதாகவும், அதற்கான நஷ்டஈட்டை அரசும், பொலிஸ் பொறுப்பதிகாரியும் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டுமெனவும், உயர்நீதிமன்றம் இன்றைய தனது தீர்ப்பில் மேலும் உத்தரவிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து இலங்கை இஸ்லாமியர்கள் பலரும் அநியாயமாக கைது செய்யப்பட்ட நிலையில் தனது தர்மசக்கர புகைப்படம் கொண்ட ஆடை (கப்டான்) அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மஹியங்கனை, ஹஸலகவை சேர்ந்த  மஸாஹிமா  கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார்.

உண்மையில் கப்பலின் சுக்கான் கொண்ட புகைப்படம் வரையப்பட்ட ஆடையைத் தான் அவர் அணிந்தார்.

இந்நிலையில் பின்நாட்களில் விடுதலையான மஸாஹிமா தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதாக கூறி உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வெளியானது.

நீதியரசர்களான யசந்த கொடேகொட, குமுதினி விக்கிரமசிங்க, ஷிரான் கொனேரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை வெளியிட்டது.

அதற்கமைய, அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் விதி 12(1), 13(1), 13(2) மஸாஹிமா விவகாரத்தில் மீறப்பட்டுள்ளது என்பதை உயர் நீதி மன்றம் இன்று உறுதிப்படுத்தியதுடன்

அப்போதைய ஹஸலக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி OIC ஜெ.பி ஷந்தன நிஷாந்த தனது சொந்த நிதியிலிருந்து 30 ஆயிரம் ரூபா நஷ்டஈட்டுத் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், வழக்கு செலவுகளை (Cost) அரசு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற குறித்த வழக்கில் சட்டத்தரணி பாத்திமா நுஷ்ராவின் வழிகாட்டலில் சட்டத்தரணி புலஸ்தி ஹேவமன்ன, சட்டத்தரணி ஹரினி ஜயவர்தன, சட்டத்தரணி இர்பானா இம்ரான் ஆகியோர் பாதிக்கப்பட்டவர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...