இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியின் விலை ரூ. 100 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் பால் மா பொதியின் விலை ரூ. 250 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாக்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.