இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு ஓமானுடன் ஒப்பந்தம்

Date:

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, ஓமானின் நிதியியல் தகவலுக்கான தேசிய நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளது.

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பணம் தூய்தாக்கல், அதனுடன் இணைந்த ஊகக் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளித்தல் என்பவற்றுடன் தொடர்புடைய நிதியியல் உளவறிதல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வசதியளிக்கின்றது.

லக்ஷம்பேர்க் நகரத்தில் நடைபெற்ற எக்மன்ட் குழுமத்தின் 31ஆவது முழுநிறைவுக் கூட்டத்தின் போது, 2025 ஜூலை 09ஆம் திகதியன்று இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதிலுமுள்ள நிதியியல் உளவறிதல் பிரிவுகள் தகவல்களை பகிர்ந்துக்கொள்வதனூடாக அவற்றின் சர்வதேசரீதியான இணைத்தரப்பினர்களுடன் ஒத்துழைப்புக்களை பேணிவளர்ப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுகின்றன. சிக்கலான எல்லை கடந்த குற்றவியல் வலையமைப்புகளை அடிக்கடி ஈடுப்படுத்துகின்ற பணம் தூயதாக்கல், பயங்கரவாதி நிதியிடலுக்கெதிரான உலகளாவிய போராட்டத்தில் இவ்வொத்துழைப்பு இன்றியமையாததாகும்.

ஓமானின் நிதியியல் தகவலுக்கான தேசிய நிலையம், குற்றம், பணம் தூயதாக்கல் அல்லது பயங்கரவாதி நிதியிடல் நடவடிக்கைளுடன் இணைந்த பணப்பெறுகைகளுடன் தொடர்புடையதாகவிருக்கின்ற அல்லது அதனுடன் இணைந்தவை என சந்தேகிக்கப்படுகின்ற அறிக்கைகளையும் தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும், கோருவதற்கும் பொறுப்பாணையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு இலங்கைக்கான பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் கட்டமைப்பிற்கான நோக்கு மையம் என்ற வகையில் பணம் தூயதாக்கல்/ பயங்கரவாதி நிதியிடல் தொடர்பான சந்தேகத்திற்குரிய நிதியியல் கொடுக்கல்வாங்கல்கலுடன் அல்லது வேறேதேனும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தகவல்களைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து பரவசெய்கின்றது.

நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் முனைவர் சுபாணி கீர்த்திரட்ண, ஓமானின் நிதியியல் தகவலுக்கான தேசிய நிலையத்தின் நிறைவேற்றுத் தலைவர் கேணல் அப்துல் ரஹ்மான் அமுர் அல்-கியூமி ஆகியோர் உரிய நிறுவனங்கள் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலம், உளவறிதல் நோக்கங்களுக்காக தகவல்களைப் பகிர்ந்துக் கொள்ளும் பொருட்டு, தற்போது இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவானது 46 வெளிநாட்டு இணைத்தரப்பினர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...