இலங்கை மீது அமெரிக்கா விதிக்கும் வரியில் தள்ளுபடி!

Date:

அமெரிக்காவால் அதிகளவு வரி தள்ளுபடி வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்குவதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு பல்வேறு பங்குதாரர்களுடன் மேற்கொண்ட தீவிர பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர முயற்சிகளின் பலனாகவே  இந்த  வரிக்குறைப்பு கிடைத்துள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

அதன் அடிப்படையில்  அமெரிக்கா, ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் அறிவித்திருந்த 44 சதவீத வரியை மறுசீரமைத்து, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் 30 சதவீத வரி மட்டுமே விதிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  அமெரிக்காவின் குறித்த தீர்மானம், இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு நன்மை தரக்கூடிய ஒன்றாக இருக்குமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்  குறித்த வரிச் சலுகை காரணமாக இலங்கை தயாரிப்புகள் அமெரிக்க சந்தையில் போட்டித் திறனை அதிகரிக்கும் என்பதுடன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...