“எங்கள் உறவுகளின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்'” ஆப்கானிஸ்தானை முதல் முறையாக அங்கீரித்த ரஷ்யா: பின்னணி

Date:

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தானை பல நாடுகளும் இன்னும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை.

இந்நிலையில் , ஆப்கானிஸ்தான் அரசை ரஷ்யா முதல் முறையாக அங்கீகரித்துள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானுக்கான தூதரை ரஷ்யா அங்கீரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான்களை அமெரிக்கா உள்பட பல நாடுகள் ‘பயங்கரவாதிகளாக’ அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தாலிபான்கள் உள்நாட்டு போரை தொடங்கி தான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினர்.

இதனால் இன்னும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசுக்கு பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

இந்தியா, ரஷ்யா, சீனா உள்பட பல நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தாலும் கூட அந்த நாட்டின் தாலிபான் அரசுக்கு அங்கீகரிக்கவில்லை.

இந்நிலையில் தான் முதல் முதலாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அதாவது சமீபத்தில் ரஷ்யாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதரகராக தாலிபான் அரசால் குல் ஹசன் நியமிக்கப்பட்டார்.

அவரை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் தாலிபான் தூதரை ரஷ்யா அங்கீகரித்தது.

இந்த விழாவில் ரஷ்யாவின் வெளியுறவுத் துணை அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ, தாலிபான் தூதர் குல் ஹசனை சந்தித்து முறைப்படியான சான்றுகளை பெற்று கொண்டார்.

இந்த அங்கீகாரத்தை தொடர்ந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஆப்கானிஸ்தானின் தூதரகத்தில் தாலிபான்களின் வெள்ளை நிற கொடி ஏற்றப்பட்டுள்ளது. முந்தைய ஆப்கானிஸ்தான் அரசின் கொடி அகற்றப்பட்டது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை தாலிபான்கள் வரவற்றுள்ளன. இதுதொடர்பாக . தலிபானின் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி கூறுகையில், “இது நமது உறவுகளின் வரலாற்றில் ஒரு பெரிய மைல்கல்” என்றார்.

இதன்மூலம் தாலிபான்களை முறையாக அங்கீகரித்த முதல் நாடு என்ற பெயரை ரஷ்யா பெற்றுள்ளது. இது தாலிபான்களின் வரலாற்றில் பெரிய மைல்கல்லாகும்.

இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‛‛ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் செயல் இருநாடுகள் இடையேயான உற்பத்தி, பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி வந்தாலும் கூட ரஷ்யா தொடர்ந்து நல்லுறவை பேணி வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ரஷ்யாவின் தூதரகம் உள்ளது

. வர்த்தகம், விவசாயம் உள்பட பல துறைகளில் ஒருங்கிணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில் இருநாடுகளும் ஈடுபட்டு வந்தன. இப்போது தாலிபான்களை முறையாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் சொந்த நாட்டு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இது பெண்களின் கல்வியறிவு உள்ளிட்டவற்றை பாதிக்கும் வகையில் உள்ளது. இதனை நீக்க வேண்டும் என்று பல நாடுகளும் கோரி வருகின்றன. அதுமட்டுமின்றி மனித உரிமைகளை தாலிபான்கள் பின்பற்ற வேண்டும்.

அப்போது தான் அங்கீகாரம் வழங்கப்படும் என்று பல நாடுகளும் தெரிவித்துள்ளன. இப்போது ரஷ்யா முதல் முறையாக தாலிபான்களை அங்கீகரித்துள்ளதால் வரும் நாட்களில் மற்ற நாடுகளும் தாலிபான்களை அங்கீகரிக்க வாய்ப்புள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...