கதுருவெல காதியும் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது

Date:

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் பொலன்னறுவை கதுருவெல பகுதியிலுள்ள காதி நீதிமன்றத்தின் நீதிபதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் எழுத்தாளர் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் தங்களது அலுவலகத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விவாகரத்து வழக்கு ஒன்றில் விரைவாக தீர்ப்பை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து ஒரு இலட்சம்  ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் காதி நீதிபதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இவரை கதுருவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் கெலிஓயாவில் 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக காதி நீதிவான் கைது செய்யப்பட்டிருந்தார்.

Popular

More like this
Related

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் அனாதை இல்லத்திற்கு விஜயம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி...