‘கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப. 04:00 மணிக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலை புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
அஸ்ஷேக் எம்.டி.எம். ரிஸ்வி (மஜீதி) தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராசிரியர் எம்.சி.ஏ நசார் ((PhD), MCPM, LLB Senior Lecturer, South Eastern University of Sri Lanka) பங்கேற்கவுள்ளார்.
நிகழ்வின் முதன்மை உரையை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் (PhD) அவர்களும் நூல் மதிப்புரையை ஃபாத்திஹ் உயர் கல்வி நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளர் ரவூஃப் ஜெயின்(PhD)அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.