கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மாணவிகளின் வரலாற்றுச் சாதனை: 9A பெற்ற 6 மாணவிகள்!

Date:

கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு முஸ்லிம் மகளிர் பாடசாலையாக திகழும் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் இம்முறை சாதாரண தர (O/L) பரீட்சையில் சாதனைப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற பரீட்சையில், 9 பாடங்களிலும் A தரத்தில் அதி விசேட சித்தி (9A) பெற்ற 6 மாணவிகள், பாடசாலையின் வரலாற்றில் முதன்முறையாக இந்த உயரிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இவர்கள் பெயர்கள் வருமாறு:

  1. M.I.F. Ifadha – 9A

  2. M.I. Ishrath Rahna – 9A

  3. M.R. Rahma Zainab – 9A

  4. M.F. Sana – 9A

  5. M.N. Zafa – 9A

  6. M.R.F. Areej – 9A

இந்த சாதனையின் மூலம் அவர்கள் பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இது தவிர அடுத்தடுத்து பெறுபேற்று தரங்களில் மாணவிகள் பெற்ற புள்ளிகளின் விபரம்.

7.A.R.F. MISBA 8A B
8.M.I.F.SHAHAZA 7A 2C
9.M.I.SHAIMA 6A 3B

இதற்கு அடுத்த பெறுபேறு பட்டியலில் 5A அதிவிசேட சித்தியை பெற்ற மாணவிகள் இரண்டு பேரும்,4 A அதி விசேட சித்தி பெற்ற மாணவிகள் 4 பேரும் இந்த சிறந்த பெறுபேற்று பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

மொத்தமாக 46 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றி கணித பாட சித்தியுடன் உயர் தரத்துக்கு 33 மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர். இது மொத்த சித்தி வீதத்தில் 72% வீதம் ஆகும். ஐந்து பாடங்களிலும் கணித பாடம் தவிர்த்து 37 மாணவிகள் சித்தியடைந்திருப்பதுடன் இது நூற்று வீதத்தில் 80% ஆகும்.

ஐந்து பாடங்களிலும் 3C சித்தியோடு சித்தி பெற்றுள்ள மாணவிகள் 38 பேர்.
இதன்படி அதி சிறந்த பெறுபேற்று புள்ளிவிபரத்தின் படி இம்முறை வெளிவந்த கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிக்காவின் சாதாரண தர பெறுபேற்று சுருக்கத்தை கீழுள்ளவாறு சுருக்கி நோக்க முடியும்.

9 A-06
8 A B1- ஒருவர்
7A 2C.01 ஒருவர்
06 A. 3B 01ஒருவர்
05 A.02பேர்
04 A-04பேர்.

09 பாடங்களிலும் A சித்தியை பெற்றுக்கொடுத்துள்ளமை பாலிக்காவின் வரலாற்று சிறப்பு மிக்க அடைவாகும் .

இந்த உயரிய சாதனைக்காக பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவியர் சங்கம் மற்றும் நலன்புரிச்சங்கம் ஆகியோர் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு, கஹட்டோவிட்ட மக்கள் சார்பில் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்த சாதனை, கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிக்காவின் கல்வி தரத்தையும், சமூக முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கிறது.

தொகுப்பு
எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...