காசாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய போரின்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் பலர் உளவியல் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், போரின்போது ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளால் தற்கொலை செய்துக் கொண்ட இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை தற்போது 43 ஆக உயர்ந்துள்ளது என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், “போரில் உள்ள பிரச்சனைகள், பயம், இரத்தம் மற்றும் மரணங்கள் போன்றவை பலரை மனதளவில் கடுமையாக பாதிக்கின்றன. நேர்மறையான சிகிச்சை இல்லையெனில், அவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்” என குறிப்பிட்டுள்ளனர்.