காசா கொலைக்களமாகியுள்ளது; மனிதாபிமானமுள்ளவர்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும் – மலேசிய பிரதமர் அவசர வேண்டுகோள்

Date:

காசாவின் துயரம் எல்லோருக்கும் பொதுவான மனிதாபிமானத்துக்கான சோதனையாகும். குழந்தைகள் உட்பட முழுக் குடும்பங்களும் கொல்லப்படுகின்றன.

எஞ்சியவர்கள் பசியால் வாடுகின்றனர். உயிர்வாழ்வதையும் மனித கௌரவத்தையும் புறக்கணிக்கும் இந்தப் பயங்கரம் முடிவுக்கு வர வேண்டும், இது மிக அடிப்படையான பண்பாடுகளையே மீறுவதாகும் என மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது x தளத்தில் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

x தளத்தில் அவர் பேசி வெளியிட்டுள்ள காணொளியில், இந்த விடயத்தில் அவசரமாகச் செயல்படுமாறு மலேசியா அனைத்து உலகத் தலைவர்களையும்கேட்டுக்கொள்கிறது.

சர்வதேச சட்டத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு அரசாங்கமும், மனித உயிரை மதிப்பதாகக் கூறும் ஒவ்வொரு தேசமும் இதற்காக ஒரே குரலில் பேச வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் , இஸ்ரேல் மீது செல்வாக்கு செலுத்தும் அனைவரும் உறுதியாகச் செயல்படுவதற்கான தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

கொலையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், கண்மூடித்தனமான குண்டுவெடிப்புகளை நிறுத்தவும், மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களுக்கு தடையின்றி நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்யவும் தமது செல்வாக்கைப் பயன்படுத்துமாறு, குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம், நான் கேட்டுக்கொள்கிறேன்.

நேர்மையான தலைமைக்கான நேரம் இது. நாம் பாதுகாப்பதாகக் கூறும் மனிதப் பெறுமானங்களைகளை நிலைநிறுத்த வேண்டிய நேரம் இது.

காசாவிற்கு நிவாரணம் வழங்கவும், மனிதகுலத்தின் அடிப்படை நெறிமுறைகளை மீட்டெடுக்கவும், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு மலேசியா தயாராக உள்ளது.

ஒதுங்கி இருந்தவர்களாக நாம் நினைவுகூரப்படக்கூடாது. நமது மனசாட்சி நம்மை வழிநடத்தட்டும். துன்பப்படுபவர்களுக்கு இரக்கம் காட்டுவோம், மனிதகுலத்தின் நன்மைக்காக அமைதியைப் பேணுவோம் என்வும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...