காஸாவுக்கு சென்ற நிவாரண கப்பலை 2வது முறையாகவும் இடைமறித்தது இஸ்ரேல்; 21 போ் கைது!

Date:

காஸாவில் நாளுக்கு நாள் பட்டினியால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் அங்கு மனிதநேய உதவிகளை வழங்கச் சென்ற சமூக ஆா்வலா்களின் கப்பலை இஸ்ரேல் 2-ஆவது முறையாக இடைமறித்து 21 பேரை கைது செய்ததாக ஃப்ரீடம் ஃபுளோடில்லா அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

முன்னதாக, இதே அமைப்பு இயக்கிய சரக்கு கப்பலில் கடந்த ஜூன் மாதம் காஸாவை நோக்கிச் சென்ற சமூக ஆா்வலா் கிரேட்டா தன்பா்க் உள்பட 12 பேரை இஸ்ரேல் கைது செய்த நிலையில், தற்போது சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் என 21 பேரை கைது செய்துள்ளது.

இதுகுறித்து ஃப்ரீடம் ஃபுளோடில்லா அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஹன்டாலா என்ற கப்பலில் காஸைவை நோக்கி மனிதநேய உதவிகள் வழங்கச் சென்ற 21 பேரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது. காஸாவுக்கு 40 மைல் தொலைவில் நியாயமற்ற முறையில் கப்பலை இடைமறித்ததோடு, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மற்றும் பிற தொடா்பு சாதனங்களை சனிக்கிழமை இரவில் தகா்த்தெறிந்தது.

இந்தக் கப்பலில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லப்படவில்லை. காஸாவில் கடும் பட்டினியால் தவித்துவரும் மக்களுக்கு வழங்குவதற்காக உணவு மற்றும் மருத்துவப் பொருள்கள் உள்பட நிவாரணப் பொருள்களே கொண்டுசெல்லப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...