ஈ-விசா வழங்கும் செயல்முறை தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய, உயர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.