இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில், தென்கிழக்குப் பல்கலையில் பகிடிவதைக்கு எதிரான பிரகடனத்துடன், 2023/2024 கல்வியாண்டிற்காக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று (01) இடம்பெற்றது.
இங்கு இளங்கலை மாணவர் வழிகாட்டி நூல் ஒன்றும் நிகல்நிலையூடாக் வெளியீடு செய்யப்பட்டது. இரண்டாம் ஆண்டு மாணவர்களால் பகிடிவதைத் தடுப்பு அறிவிப்பு ஒன்றும் பிரகடனப்படுத்தப்பட்டது.
குறித்த பிரகடனத்தில் 2022 மற்றும் 2023 கல்வியாண்டு மாணவர்களாகிய நாங்கள் 2023 மற்றும் 2024 மாணவர்களை உள்ளீர்க்கும் இந்த மகத்தான நாளில் ஜூலை முதலாம் திகதி 2025ம் பின்வரும் உடன்பாட்டை பிரகடனப்படுத்துகிறோம் என்பதை மகிழ்ச்சி அடைகின்றோம்.
இந்தப் பிரகடனத்தை நாங்கள் எவ்வித அழுத்தமும் இன்றி நாமாகவே எங்கள் தொகுதி மாணவர்கள் சார்பில் தெளிவித்துக் கொள்கிறோம். வரலாற்று முக்கியத்துடன் மிகக் இந்த கைங்கரியத்தை ஏனைய பீட மாணவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.





