சவூதி அபிவிருத்தி நிதியத்தின் 28 மில்.டொலர் நிதியுதவியில் வயம்ப பல்கலைக்கழக அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு!

Date:

இலங்கையில் சவூதி அரேபியாவின் 11 வது மேம்பாட்டு முயற்சியான வயம்ப பல்கலைக்கழகம் நகர அபிவிருத்தி திட்டம் இன்று (14) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவுக்கு  பிரதி சபாநாயகர் Dr.றிஸ்வி ஸாலிஹ் , சவூதி அபிவிருத்தி நிதிய தலைவர் பேராசிரியர் சுல்தான் பின் அப்துல் ரஹ்மான் அல் – மர்ஷத் அவர்களும் இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி  ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த திட்டம் சவூதி மேம்பாட்டு நிதியத்தின் (Saudi Fund for Development) மூலம் 28 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய அதிகாரிகளும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் , கல்விசார் பல முக்கியஸ்தர்களும் இரு நாட்டு பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் திகதி வயம்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இந்த திட்டத்தின் ஊடாக வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாப்பிட்டிய மற்றும் மாகுந்தர ஆகிய வளாகங்களில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இது சவூதி அரேபியா மற்றும் இலங்கையிடையிலான வளர்ச்சி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கியக் கட்டமாக கருதப்படுகிறது.

சவூதி அரேபியா “மதம் கடந்த மனிதாபிமானம்” என்ற அடிப்படையில் மனிதாபிமானத்துக்கு மதம் இல்லை என்ற கோட்பாட்டில் உலகில் வாழும் எல்லா நாடுகளுக்கும் மனிதாபிமான உதவிகள் செய்து வருவது மிகவும் வரவேற்கத்தக்கது.

இதுவரை இலங்கையில் 13 முக்கிய திட்டங்களுக்காக சவூதி நிதியம் 425 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.  அதன் தொடரில் வயம்ப பல்கலைக்கழகத்தை பலப்படுத்தும் நோக்கத்தோடு இந்த அபிவிருத்தி திட்டம் திறந்துவைக்கப்பட்டது.

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...