சீதாவக்கை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதைத் தடுத்து, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனுவை சீதாவக்க பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்தனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெனாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, இந்த விடயங்களை முன்வைத்து மாவதகம மற்றும் சீதாவக்கை நகர சபை சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.