ஜனாதிபதி ஊடகப்பிரிவில் பணிபுரிபவர்களில் பதவிகள் மற்றும் பெயர்கள் அடங்கிய பட்டியலை கோரி சமூக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார விண்ணப்பித்த தகவல் அறியும் விண்ணப்பம் ஜனாதிபதி செயலாளரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகவல்கள் என்ற வகைக்குள் அடஙகுவதாகக் கூறி ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் ஜி.பி.எச்.எம். குமாரசிங்க இந்த மறுப்புக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவில் அண்ணளவாக 90 பேர் கடமையாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.