தென்கிழக்கு பல்கலைக்கழக தாக்குதல் விவகாரம்: மாணவர்களை விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிப்பு

Date:

ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்று (15) இரவுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல்கலைக்கழகத்தில் நாளை (17.07.2025) நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

தங்கள் மீதான பகிடிவதை தொடர்பில் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்த காணொளிகளை, பகிரங்கப்படுத்தியமை தொடர்பில் குறித்த மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான 04 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக, சென்ற நோயாளர் காவு வண்டியின் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொறியியல் பீடத்தில் முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது, சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதையில் ஈடுபட்டமை தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...