ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தனக்கு பரிசாகக் கிடைத்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய வான் வழி ட்ரோன் தாக்குதல்களால் விமான சேவையில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து, அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
அவர் ஆளுநர் பதவி வகித்தபோது அரசு பணத்தை முறைகேடாக செலவழித்தாதகவும் குற்றச்சாட்டு உள்ளது. ரோமன் ஸ்டாரோவாய்ட்டை நீக்கிவிட்டு அப்பதவியில், அவருக்கடுத்த நிலையில் பொறுப்பு வகித்த ஆண்ட்ரே நிகிடின் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்கும் அவரது மரணத்துக்கும் சம்பந்தமில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.