மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ மீது மற்றுமொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Date:

சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின்  பெர்னாண்டோ மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோருக்கு எதிராக இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை கொள்வனவு செய்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக் கூறி இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப் பத்திரிகையைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன மூன்று பிரதிவாதிகளையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

எனினும், அவர்களுக்கு ஏற்கனவே உள்ள சிறைத்தண்டனைகள் காரணமாக, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரை அடுத்த திட்டமிடப்பட்ட விசாரணை நாளில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய வழக்கில் குற்றச்சாட்டுகளின் நிலைத்தன்மையை எதிர்த்து, ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

 

ஆரம்ப ஆட்சேபனைகளை பரிசீலிக்க செப்டம்பர் மாதம்  4 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...