மாலைதீவின் அரச பிரதானிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Date:

மாலைதீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் 5 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (29) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர்.

அதன்படி, மாலைதீவு பிரதி சபாநாயகர் அகமத் நஸீம் (Ahmed Nazim), வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல் (Dr. Abdulla Khaleel) பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் மொஹமட் சயீத் (Mohamed Saeed), பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் கசான் மௌமூன் (Mohamed Ghassan Maumoon), நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் மூசா சமீர் (Moosa Zameer), உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அலி இஹுசான்(Ali Ihusaan) ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.

மாலைதீவுக்கு அரச விஜயம் மேற்கொண்டதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்தப் பயணம், எதிர்காலத்தில் ஆழமான ஒத்துழைப்பு, பரந்த புரிதல் மற்றும் சிறந்த நட்புக்கான அடித்தளமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

May be an image of 2 people, dais and text

May be an image of 2 people and dais

May be an image of 2 people, dais and text

May be an image of 2 people and dais

May be an image of 2 people and dais

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...