அக்டோபர் முதலாம் திகதி முதல் நாட்டில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான பெறுமதி சேர் வரியை (VAT) விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறிப்பிடத்தக்க டிஜிட்டல் சேவைகள் வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் 18 ஆம் தேதி வரை வரிக்கு உட்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டத்தின்படி, டிஜிட்டல் சேவைகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த புதிய டிஜிட்டல் சேவை வரி தொடர்பான வழிகாட்டுதல்களை 2025 ஜூலை மாதம் முதல் தேதி 2443/30 இலக்க விசேட வர்த்தமானி மூலமாக வெளியிட்டிருந்தது.
இலங்கையில் உள்ள நபர் ஒருவருக்கு மின்னணு தளம் மூலம் சேவைகளை வழங்கும் வெளிநாட்டினரும் இந்த டிஜிட்டல் சேவைகளுக்கு வரி செலுத்த நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் 60 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான சேவைகளை வழங்கியவர்கள் அல்லது கடந்த காலாண்டில் 15 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான சேவைகளை வழங்கியவர்கள் வற் வரிக்கு பதிவு செய்வது கட்டாயமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறிப்பிடத்தக்க டிஜிட்டல் சேவைகளுக்கு வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் 18ஆம் திகதி வரை வரி விதிக்கப்படுகிறது.