முஸ்லிம் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற காலி மாவட்ட அஹதிய்யா ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு

Date:

காலி மாவட்ட அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கொன்று, கடந்த 19 ஆம் திகதி காலி மாவட்டச் செயலகக் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கு  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத்திய சம்மேளன உறுப்பினர்கள், காலி மாவட்ட அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்கள்,  அதிபர்கள், காலி மாவட்ட அஹதிய்யா சம்மேளன உறுப்பினர்கள், மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

வளவாளர்களாக யூ.எல்.ரிபாய்தீன் (ஆசிரியர் ஆலோசகர்,கல்முனை வலயக்கல்விக் காரியாலயம்), எம்.எம்.ஷமீம் (உப அதிபர்,சாஹிரா தேசிய பாடசாலை,காலி) மற்றும் ஏ.ஆர்.ஏ.ஹபீழ் (அபிவிருத்தி உத்தியோகத்தர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்தகைய கருத்தரங்குகள், ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் எதிர்காலத்திலும் தொடர்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...