மூத்த ஊடகவியலாளர், கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர் கனி காலமானார்..!

Date:

சத்திய எழுத்தாளரும் மூத்த ஊடகவியலாளரும் கலை இலக்கியவாதியுமான கலாபூஷணம் எஸ். ஐ. நாகூர் கனி துபாயில் காலமானார்.

கொழும்பில் பிறந்து வளர்ந்து பல் துறைகளிலும் அனுபவம் கொண்டவர் மட்டுமல்லாது இளைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டியாகவும்.
தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்ற ஒருவர்.

பாடசாலைகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் போன்ற நிறுவனங்களால் நடாத்தப்படும் போட்டிகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு நடுவராகவும், வினாத்தாள்கள் திருத்துதல் போன்ற பணிகளிலும் சிறப்பாக பணியாற்றிய ஒருவர்.

பல தமிழ் பத்திரிகைகளுக்கு ஊடகவியலாளராகவும் எழுத்தாளருமாக பணியாற்றியுள்ளார் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
தனது தமிழ் கலை ஆர்வத்தால் தேசிய சிறுகதை போட்டிகளில் பங்குபற்றி முதற் பரிசுகளையும் பெற்றவர்.

வலம்புரி கவிதா வட்டத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகவும் காணப்பட்டார்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஊடுருவல் சமுகம் சித்திர நிகழ்ச்சிக்காக தொடர் ஆக்கங்களை எழுதியும் பின்னணி குரலும் கொடுத்து தனது திறமையை வெளிப்படுத்தியவர்.

சமய, சமுக அக்கறை கொண்டவர் மட்டுமல்லாது அதில் ஈடுபட்டு தனது பங்களிப்பை வழங்கியவர்.

குறிப்பாக 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு வாழைத்தோட்ட பகுதியில் நலன் புரிச்சங்க தலைவராக இருந்து பல சேவைகளை செய்ததுடன் வாழைத்தோட்ட அல் மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரசா பள்ளிவாசலின் முதலாவது தலைவராகவும் பணியாற்றி வந்திருந்தார்.

மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் மகனின் தந்தையுமான இவர் தனது ஒரு மகளை வைத்திய துறைக்கு கற்க வைத்து வைத்தியராக்கியுள்ளார்.

துபாயில் வசிக்கும் தனது பிள்ளைகளிடம் சென்றிருந்த வேளையில் மாரடைப்பால் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

(சத்தார் எம் ஜாவித்)

Popular

More like this
Related

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...