ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பலஸ்தீனியர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறைகள் தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல்வீரவன்ச, தாம் எழுதிய புதிய பாடலை வெளியிடவுள்ளார்.
‘யாருடைய தோட்டாக்கள் இவை? என்ற தலைப்பிலான பாடல் பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் வீரவன்ச முன்னர் பாடல்களை எழுதி பாடியுள்ளார்.