ரி.பி. ஜாயா ஸஹிரா கல்லூரியில் வரலாற்றுச் சாதனை: 9A பெற்ற மாணவனுக்கு பாராட்டு நிகழ்வு

Date:

கொழும்பு ரி.பி. ஜாயா கொழும்பு ஸாஹிரா கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் (GCE O/L) சிங்கள மொழி மூலமாக 9 பாடங்களிலும் A சித்திகளைப் பெற்று எம்.ஐ. முஆத் அஹமட் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார்.

மாணவனை கௌரவிக்கும் வகையில்  ஜூலை 18 வெள்ளிக்கிழமை, ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் மாளிகாவத்தை மஸ்ஜிதுஸ் ஸலாம் ஜும்ஆ மஸ்ஜிதில் சிறப்புப் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்த கெளரவிப்பு நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் எம்.ஜே.எம்.சியாத், பள்ளிவாசல் பிரதம இமாம் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் இம்ரான் மசூத், கொழும்பு மாநகர சபைத் உறுப்பினர் ஏ.எம்.ஜே.எம்.ஜெளபர், கொழும்பு மாவட்ட முஸ்லிம் விவாகப் பதிவாளர் பெளசுல் அலீம் பாரூக் அவர்களும் நினைவு பரிசுகளை வழங்கினர்.

மேலும் மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனத்தின் செயலாளர் எம்.எஸ்.எம். இல்யாஸ், பேட்டை மஸ்ஜித் கூட்டமைப்பின் செயலாளர் ஏ.எச்.எம். நாசர், மஸ்ஜிதுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி அல் ஹாஃபில் இமாறன் மஸ்ஹூத், செயலாளர் ஏ.எச்.எம். பைசர், உப தலைவர் இம்தியாஸ் நூர்தீன், உதவிச் செயலாளர் எம்.எச்.எம்.பைசல் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர், பிரதேசவாசிகள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...