நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
வரட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடைந்து வருவதுடன், கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் நீரை பயன்படுத்துகின்றனர்.இதனால் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், அன்றாட தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறும், வாகனங்களை கழுவுதல், தோட்டங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நீரை பயன்படுத்துவதை குறைக்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 1939 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் அச்சபை தெரிவித்துள்ளது.