அமெரிக்க வரி விதிப்பால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5% குறையக்கூடும் – IMF எச்சரிக்கை!

Date:

இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் 44 சதவீத ஒத்திவைக்கப்பட்ட வரி விதிப்பால்  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5 சதவீதம் வரை குறையக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரலாறு காணாத டொலர் பற்றாக்குறையால் நிதி நெருக்கடியில் சிக்கிய இலங்கை, 2023 மார்ச் மாதம் உலகளாவிய கடன் வழங்குநரிடமிருந்து 2.9 பில்லியன் டொலர் நான்கு ஆண்டு திட்டத்தைப் பெற்றதிலிருந்து வலுவாக மீண்டுள்ளது.

ஆனால், அமெரிக்காவால் தூண்டப்பட்ட வர்த்தகக் கொந்தளிப்பு,  நாட்டின் சுமார் $3 பில்லியன் ஏற்றுமதிகளுக்கு 44% இறக்குமதி வரிகளை விதித்தது.

 

இது இலங்கைக்கு பெரிய நெருக்கடிய‍ை ஏற்படுத்தக் கூடும் என்று உலகளாவிய கடன் வழங்குபவர் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வை சுமார் $350 மில்லியனுக்கு அங்கீகரித்த பின்னர் கூறினார்.
எனினும், ட்ரம்பின் முழு வரி விதிப்பானது மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனால் இலங்கையிலிருந்து அமெரிக்க இறக்குமதிகள் இன்னும் பிற நாடுகளைப் போலவே 10% அடிப்படை வரிக்கு உட்பட்டதாகவே இருக்கும்.

இந்த நிலையில், சர்வதேச கடன் வழங்குனர்களின் திட்டத்தின் வரையறைகளுக்குள் தாக்கத்தை மதிப்பிடுவதற்கும் கொள்கை பதில்களை உருவாக்குவதற்கும் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்று இலங்கைக்கான IMF திட்ட தலைவர் இவான் பாபஜெர்ஜியோ ஒரு ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 

அத்துடன், மீதமுள்ள அதிகாரப்பூர்வ மற்றும் வணிக கடன் வழங்குநர்களுடனான இலங்கையின் இருதரப்பு ஒப்பந்தங்களை சரியான நேரத்தில் இறுதி செய்வது முன்னுரிமை என்று பாப்பஜோர்கியோ மேலும் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு சுமார் 22.5 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க முக்கிய கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒரு முதற்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதில் சீனாவுடன் சுமார் 4.75 பில்லியன் டொலர் கடன்களுக்கான ஒப்பந்தம் அடங்கும்.

இலங்கையின் மத்திய வங்கி விலை ஸ்திரத்தன்மைக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மேலும் அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தைத் தொடர வேண்டும் என்றும் பாபஜெர்ஜியோ செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த ஆண்டு 5% வளர்ச்சியைப் பெற்ற இலங்கை இந்த ஆண்டு 3.5% வளர்ச்சியை அடையும் பாதையில் உள்ளது என்று உலக வங்கி அதன் அண்மைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.இது கடந்த ஒக்டோபர் மாத கணிப்பில் இருந்து மாறாமல் உள்ளது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...