முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட குர்ஆன் மத்ரஸாக்களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் உலமாக்களுக்கான ஒரு நாள் பயிற்சிக் கருத்தரங்கு திணைக்களத்தின் பணிப்பாளர். எம்.எஸ்.எம்.நவாஸ் அவர்களின் வழிகாட்டலில் உதவிப் பணிப்பாளர். என். நிலோபர் தலைமையில் தெஹிவள முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் சென்ற (08)ம் திகதி சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா கொழும்பு தெற்கு உதவித் தலைவர். அஷ் ஷெய்க் அப்துல்லாஹ் பாஸி (ரசாதி) கலந்து கொண்டிருந்தார்.
மேற்படி கருத்தரங்கு வினைத்திறன் மிக்க குர்ஆன் மத்ரஸாவை நோக்கி, குர்ஆன் மத்ரஸா ஆசிரியர்களின் புரிதல்களும் பொறுப்புக்களும், குர்ஆனுடன் ஆன்மீகத் தொடர்பை உருவாக்குதல் மற்றும் தனிப்பட்ட உறவுகளை பேணுதல் ,ஆகிய மூன்று தலைப்புக்களில் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.ஹபீல், அஷ் ஷெய்க் நளீம் றபீக், கொழும்பு மாவட்ட அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷைக். அப்துல் முக்சித் ஆகியோர் வளவாளர்களாக கலந்து விரிவுரைகளை வழங்கினர்.
இக்கருத்தரங்கில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து பயன்பெற்றமை குறிப்பிடத் தக்கது.
இந்நிகழ்வின் வரவேற்புரையை உதவிப் பணிப்பாளர் என். நிலோபர் வழங்கியதோடு நன்றியுரையை வக்பு பிரிவு பொறுப்பாளர். ஏ.எஸ்.எம்.ஜாவித் வழங்கினார்.
திணைக்கள உத்தியோகத்தரும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான அஷ்ஷைக். றிஸ்மி காஸிமி நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
கருத்தரங்கின் உதவி ஒருங்கிணைப்பாளர்களான திணைக்களத்தின் சமய விவகாரப் பிரிவின் பிரதம முகாமைத்துவ அலுவலர். திருமதி ஹைருன் றபியுதீன், சமய விவகாரப் பகுதி உத்தியோகத்தர் அஷ்ஷைக்.முப்தி முர்ஸி நளீமி,திருமதி பர்மிலா, திருமதி பர்வின், சியாம் மொஹமட் கியாஸ், களுத்துறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பிலால்,கம்பஹா மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நஸ்பியா ஆகியோரும் சிறப்பான இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தகவல்.
ஏ.எஸ்.எம்.ஜாவித்.