ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் பேருவளை நகர சபையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும் சுயேட்சைக்குழு-01, 7 ஆசனங்களையும் பெற்றுள்ளது.
பேருவளை நகரசபை மேயராக மொஹமட் அசாகீர் மொஹமட் முபாஸிம் தெரிவு செய்யப்பட்டார். பிரதி மேயர் பதவி ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்டுள்ளது.