45 ஆசனங்களைக் கொண்ட வெலிகம பிரதேச சபையின் 22 ஆசனங்களைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க முடியாமல் போயுள்ளது.
வெலிகம பிரதேச சபைக்கான தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி 22 ஆசனங்களை வென்றிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தி 9, ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன 6, ஐக்கிய தேசியக் கட்சி 2, சர்வஜன அதிகாரம் 2, மக்கள் கூட்டணி (PA ) 1, சுயேட்சை 3 ஆசனங்களை ப் பெற்றிருந்தன.
இந்த நிலையில் பிரதேச சபைத் தலைவரைத் தெரிவு செய்வதற்காக இன்று நடந்த வெளிப்படையான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி (9) ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன (6), ஐக்கிய தேசியக் கட்சி (2), சர்வஜன அதிகாரம் (2), மக்கள் கூட்டணி (PA ) (1), சுயேட்சை (3) இணைந்து வழங்கிய 23 வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் லசந்த விக்ரமசேகர வெலிகம பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவானார்.
எதிர்க் கட்சி உறுப்பினர் தெனகம ராஹுல தேரோ பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.