‘கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்’நூல் வெளியீட்டு விழா!

Date:

‘கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப. 04:00 மணிக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலை புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

அஸ்ஷேக் எம்.டி.எம். ரிஸ்வி (மஜீதி) தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராசிரியர் எம்.சி.ஏ நசார் ((PhD), MCPM, LLB Senior Lecturer, South Eastern University of Sri Lanka) பங்கேற்கவுள்ளார்.

நிகழ்வின் முதன்மை உரையை  பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் (PhD) அவர்களும் நூல் மதிப்புரையை  ஃபாத்திஹ் உயர் கல்வி நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளர்  ரவூஃப் ஜெயின்(PhD)அவர்களும்  நிகழ்த்தவுள்ளனர்.

இந்நூல், கல்குடா பிரதேச முஸ்லிம் சமுதாயத்தின் சமூக, கலாச்சார, வரலாற்று பின்புலத்தையும், அந்த சமூகத்தின் அழிவுகள், வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் ஆகியவற்றையும் ஆழமாகப் பதிவு செய்யும் முக்கியமான விழாவாக இருக்கப்போகிறது.

அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...