கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு: இந்திய மூத்த இஸ்லாமிய மதத் தலைவர் அபூபக்கர் முஃப்தி பேச்சுவார்த்தை நடத்தியதில் முன்னேற்றம்.

Date:

யெமன் நாட்டில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்த மரண தண்டனையை நிறுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இதற்கிடையே நிமிஷா பிரியாவுக்கு நாளை நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

யெமன் நாட்டில் வேலைக்கு சென்ற கேரள செவிலியர் நிமிஷா பிரியா கொலைக் குற்றச்சாட்டில் இப்போது மரண தண்டனையை எதிர்கொண்டு இருக்கிறார்.

அவருக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மத்திய அரசு அவரை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை.

இதற்கிடையே இன்று கடைசிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே நிமிஷா பிரியாவுக்கு நாளை நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற, கேரளத்தைச் சோ்ந்த செல்வாக்கு மிக்க முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏ.பி.அபுபக்கா் அகமது முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய முஸ்லிம்களின் தலைவரான அபுபக்கா், மஹதியின் குடும்பத்தினருடன் தொடா்பில் உள்ள யெமன் மதகுருமாா்களுடன் இழப்பீட்டை ஏற்றுக்கொள்ளுமாறு பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஷரியா என்​றழைக்​கப்​படும் இஸ்​லாமிய சட்​டத்​தில் குரு​திப் பணம் என்​பது ஒரு வகை​யான நீதி​யாக கருதப்​படு​கிறது. எனவே, பிரியா குடும்​பத்​தினர் சார்​பில் உயி​ரிழந்த மெஹ்தி குடும்​பத்​தினருக்கு ரூ.8.6 கோடியை வழங்க முன்​வந்​துள்​ளனர்.

அதை மெஹ்தி குடும்​பத்​தினர்​ ஏற்பார்களா என்​பதற்​கு இதுவரை விடை கிடைக்​கவில்​லை.

கேரளத்தைச் சோ்ந்த 38 வயது செவிலியரான நிமிஷா பிரியா, யெமன் தலைநகா் சனாவில் அந்நாட்டைச் சோ்ந்த தலால் அப்து மஹதியுடன் இணைந்து கிளினிக் ஒன்றை தொடங்கி, நடத்தி வந்தாா்.

நிமிஷாவின் வருமானம், நகைகள், கிளினிக்கின் உரிமம், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு, மஹதி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, 2017-இல் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போா்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தாா்.

மஹதியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீா்ப்பளிக்கப்பட்டு, நிமிஷாவுக்கு வரும் புதன்கிழமை (ஜூலை 16) மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...