இலங்கையில் சவூதி அரேபியாவின் 11 வது மேம்பாட்டு முயற்சியான வயம்ப பல்கலைக்கழகம் நகர அபிவிருத்தி திட்டம் இன்று (14) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவுக்கு பிரதி சபாநாயகர் Dr.றிஸ்வி ஸாலிஹ் , சவூதி அபிவிருத்தி நிதிய தலைவர் பேராசிரியர் சுல்தான் பின் அப்துல் ரஹ்மான் அல் – மர்ஷத் அவர்களும் இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த திட்டம் சவூதி மேம்பாட்டு நிதியத்தின் (Saudi Fund for Development) மூலம் 28 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய அதிகாரிகளும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் , கல்விசார் பல முக்கியஸ்தர்களும் இரு நாட்டு பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் திகதி வயம்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
இந்த திட்டத்தின் ஊடாக வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாப்பிட்டிய மற்றும் மாகுந்தர ஆகிய வளாகங்களில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
இது சவூதி அரேபியா மற்றும் இலங்கையிடையிலான வளர்ச்சி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கியக் கட்டமாக கருதப்படுகிறது.
சவூதி அரேபியா “மதம் கடந்த மனிதாபிமானம்” என்ற அடிப்படையில் மனிதாபிமானத்துக்கு மதம் இல்லை என்ற கோட்பாட்டில் உலகில் வாழும் எல்லா நாடுகளுக்கும் மனிதாபிமான உதவிகள் செய்து வருவது மிகவும் வரவேற்கத்தக்கது.







