பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க கனடா முடிவு.

Date:

வரும் செப்டம்பர் மாதம் பலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, பலஸ்தீனத்தை ஆதரிப்போம் என பிரிட்டன், பிரான்ஸ் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.இந்த சூழலில், வரும் செப்டம்பர் மாதம் பலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

இது குறித்து மார்க் கார்னி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடாக இருப்பதை கனடா எப்போதும் உறுதியாக ஆதரிக்கும்.

இஸ்ரேல் அரசுடன் அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழும் ஒரு சுதந்திரமான, சாத்தியமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு பலஸ்தீனம்.

இருநாடுகள் இடையே நடக்கும் மோதலுக்கு தீர்வு காண, கனடா நீண்ட காலமாக உறுதிபூண்டுள்ளது.வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா.,வில் பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

கனடா முடிவிற்கு அமெரிக்கா, இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்த நேரத்தில் கனடா அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஹமாஸுக்கு ஒரு வெகுமதியாகும். காசாவில் போர்நிறுத்தத்தை அடைவதற்கான முயற்சிகளுக்கும், பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒரு கட்டமைப்பிற்கும் தீங்கு விளைவிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, பலஸ்தீனத்தை ஆதரிப்போம் என பிரிட்டன், பிரான்ஸ் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...