பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்தல்!

Date:

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு (Ministry of  Education) அறிவித்தல் விடுத்துள்ளது.

அதன்படி, மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.

அத்துடன் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி கற்கும் கிராமப்புற பாடசாலைகளில் அதிகளவிலான ஆசிரியர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன  தெரிவித்துள்ளார்.

எனினும் சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் இந்த ஏற்றத்தாழ்வு நாடு முழுவதும் ஆசிரியர் பங்கீட்டை கணிசமாக பாதித்து வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஏற்ப நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர்களை மறுபகிர்வு செய்ய அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும் என மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 7 பாடங்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...