காலி மாவட்ட அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கொன்று, கடந்த 19 ஆம் திகதி காலி மாவட்டச் செயலகக் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மத்திய சம்மேளன உறுப்பினர்கள், காலி மாவட்ட அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், காலி மாவட்ட அஹதிய்யா சம்மேளன உறுப்பினர்கள், மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
வளவாளர்களாக யூ.எல்.ரிபாய்தீன் (ஆசிரியர் ஆலோசகர்,கல்முனை வலயக்கல்விக் காரியாலயம்), எம்.எம்.ஷமீம் (உப அதிபர்,சாஹிரா தேசிய பாடசாலை,காலி) மற்றும் ஏ.ஆர்.ஏ.ஹபீழ் (அபிவிருத்தி உத்தியோகத்தர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத்தகைய கருத்தரங்குகள், ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் எதிர்காலத்திலும் தொடர்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.








