எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

Date:

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (04) நடைபெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான யோசனையை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்தார்.

பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை நிறுவுவதற்கும் மீளாய்வு செய்வதற்குமாக 2012 ஆம் ஆண்டு எல்லை மீள் நிர்ணயக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழுவின் ஒருசில விதந்துரைகள் மாத்திரம் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பின்னர் 2021 ஆம் ஆண்டில் மீண்டும் எல்லை நிர்ணயக் குழுவொன்று நியமிக்கப்பட்டதோடு குறித்த குழுவின் விதந்துரைகள் தொடர்பாக இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

குறித்த குழுவின் அறிக்கையில் விதந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை அந்தந்தப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு சமர்ப்பித்து குறித்த குழுக்களின் விதந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அவ்விதந்துரைகளை மீளாய்வு செய்து புதிய விதந்துரைகளுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்குமென புதிய எல்லை நிர்ணயக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீ காரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

எல்-நினோ நிலைமையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட...

முஸ்லிம்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்து வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணகள்

-லத்தீப் பாரூக் 21/04/2019 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் இதுவரை விசாரிக்கப்படாத...

டெங்கு பரவல் அதிகரிப்பு: லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை பெற்றோருக்கு அவசர அறிவிப்பு!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் (LRH) டெங்கு காய்ச்சல் காரணமாக...

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவியாக திருமதி அனீஸ்

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் என். ஆர். அனீஸ் ஜனாதிபதி...