செப். 5 வெள்ளிக்கிழமை காசாவுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுமாறு சர்வதேச உலமாக்கள் ஒன்றியம் வேண்டுகோள்

Date:

செப்டம்பர் 5, ஆம் திகதிய வெள்ளிக்கிழமை பிரசங்கத்தை துஆவுக்காக அர்ப்பணிக்குமாறு சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியம் (IUMS), உலகெங்கிலும் உள்ள இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

காசா மக்கள் எதிர்கொள்ளும் “கொலைகள், இடம்பெயர்வு மற்றும் பட்டினி” பற்றியும் இந்த வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் உலகில் பலரிடமிருந்து உதவிகள் இருந்தபோதிலும், சர்வதேச அளவிலான மூடி மறைப்புகள் மற்றும் சில ஆட்சிகளின் உடந்தைகள் காஸாவின் துன்பத்தைத் தணிக்கும் முயற்சிகளைத் தடுத்துள்ளதாக இத்திஹாதுல் ஆலமுல் உலமாஉல் முஸ்லிமீன் குறிப்பிடுகிறது.

இந்த நிலையில் , பிரார்த்தனை மூலம் படைத்தவனை நோக்கித் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு, காசா மக்களின் வெற்றிக்காகவும், அவர்களின் எதிரிகள் தோற்கடிக்கப்படுவதற்காகவும் தங்கள் கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று கடிதம் கேட்டுக்கொள்கிறது.

இந்த நோக்கத்திற்காக ஒன்றுகூடும் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் வேண்டுகோள்களை அல்லாஹ் நிராகரிக்க மாட்டான் என்றும் கத்தாரைத் தளமாகக் கொண்ட IUMS நம்பிக்கை தெரிவிக்கிறது.

இந்தக் கடிதத்தில் பொதுச் செயலாளர் டாக்டர் அலி முகமது முகமது அல்-சல்லாபி மற்றும் தலைவர் பேராசிரியர் டாக்டர் அலி மொஹியுதீன் அல்-கர்தாகி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...