சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

Date:

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 22 முதல் ஆகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், சேவையிலிருந்து தப்பியோடிய 3,504 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 2,937 பேர் இராணுவ வீரர்கள்.

மேலும், 289 கடற்படை வீரர்களும், 278 விமானப்படை வீரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத வீரர்கள் இராணுவத்தில் சரணடைவதற்காக கடந்த ஆண்டு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது.

மேலும் அந்தக் காலகட்டத்தில் சரணடையாதவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் நடந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி  விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்காலங்களில் மாணவர்கள் மற்றும்...

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 1818 தொலைபேசி இலக்கத்துக்கு 800 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்துக்கு...

புதுப்பிக்கப்படும் அஸ்வெசும தகவல்கள்!

அஸ்வெசும வருடாந்த தகவல்களை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது. 2023ம்...