அருகம்பேயை சூழ உள்ள மக்களின் சமாதானத்துக்கும் கலாச்சாரத்துக்கும் பங்கம் இல்லா வகையில் உல்லாசப் பயணிகளின் வருகை இடம்பெற வேண்டும்: ஜனாதிபதியிடம் வாஸித் எம்பி

Date:

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாஸித் நேற்றைய தினம் (07) ஜனாதிபதி அநுர குமார திஸானாயக்க அவர்களை பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, ஜனாதிபதியினால் அருகம்பே பிரதேசத்திற்கு வருகைதரக் கூடிய சுற்றுலா பயணிகள் தொடர்பாகவும், இஸ்ரேல்  சுற்றுலா பயணிகள் தொடர்பாகவும் வினவப்பட்ட கேள்விகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதிலளித்திருந்தார்.

அவர் பதிலளிக்கையில், இஸ்ரேல்  உல்லாச பயனிகளின் வணக்கஸ்தலமான சபாத் பற்றியும், அவர்கள் சுற்றுலா பயணிகளிலாக வந்து சுற்றுலா தொழிலில் ஈடுபட்டிருப்பதையும் மற்றும் அவர்களுக்கு மக்களினுடைய எதிர்ப்பினையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த பிரதேசத்தில் வாழும் மக்களின் சமாதானத்திற்கு, கலாச்சாரத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் உல்லாச பயணிகளுடைய வருகை இடம்பெற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அது மட்டுமின்றி, பொத்துவிலிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்களை நேரில் சந்திப்பதற்கான திகதியொன்றினையும் பாராளுமன்ற உறுப்பினர் வினவியுள்ளதுடன் மிக விரைவில் குறித்த சந்திப்பு இடம்பெறும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இந்த நாட்டினை முன்னேற்றுவதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இஸ்லாமிய வீரர்களுக்காக சில மாற்றங்களை செய்த FIFA: பீர் நிறுவனத்தின் லோகோக்கள் நீக்கம்.

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பம் கோரல்!

க.பொ.த சாதாரண தர 2025(2026) பரீட்சை மீள் திருத்தம் செய்வதற்கு  எதிர்வரும்...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 72வது வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை கண்டியில் ..!

கடந்த 72 வருடகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் உழைத்துவரும்...

ஆன்மீகம் மற்றும் லௌகீக முன்னேற்றங்களுக்கு வழிகாட்டும் ஆஷூரா தின சிந்தனைகள்

அகீல் பின் ஸாலிம் அல்-ஷம்மரி (அரபு மூலம்) நன்றி- அல்-முஸ்லிம் இணையதளம் (குறிப்பு: இன்றைய...