2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்” என்று இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தாமதமாக சமர்ப்பித்த அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கு இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மார்ச் மாதம் 31 ஆம் திகதி லஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் ஊடாக தெரிவித்திருந்தது.
இதன்பிரகாரம் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கு இறுதியாக ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த காலப்பகுதிக்குள் விபரங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை இதுவரை சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அதிகாரிகள்குறித்த தரவுகளை விரைவில் தங்கள் நிறுவனத் தலைவர்களிடம் சமர்ப்பித்து, விதிக்கப்படக்கூடிய அபராதத்தினை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது