கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸும் தொழில்நுட்பத்தின் மூலம் வழக்கில் இணைந்துள்ளார்.
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமிங்க அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
கொழும்பு கோட்டை நீதவான் நிலபுலி லங்காபுர முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்கவை Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக மன்றில் ஆஜர்படுத்த சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.