தவறுகளில் இருந்து மீள வருவதை இயல்பாகக் கருதியவர்கள் மூத்த இமாம்கள்!

Date:

தன்னைத் தானே சுயவிசாரணை செய்து கொண்டு தனது கருத்துக்கள் கொள்கைகள் சார்ந்த பிழைகளிலிருந்து தவறுகளில் இருந்து மீள வருவதை இயல்பாக கருதியவர்கள் எமது முன்னைய மூத்த இமாம்கள்.
அவர்களை முன்மாதிரிகளாக கொண்டு வாழ்கின்றவர்கள் வழிகாட்டுகின்றவர்கள் என்று மார் தட்டிக் கொள்கின்றவர்கள் விடாப்பிடியாக இருப்பவர்கள்
ஏன்? அவர்களுடைய இந்த நிலைப்பாடுகளில் இருந்து மாத்திரம் பாடம் படிப்பினை பெறுவதில்லை? நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றுவதில்லை? என்பது சர்ச்சைக்குரிய விடயமே
எனும் அருமையான நூல் அறிவுக் கடலாய் போற்றப்படும் இமாம் அல் கஸ்ஸாலி

அவர்கள் தன்னுடைய நிலைப்பாடுகளை எப்படி மாற்றிக் கொண்டார்கள்? ஏன் மாற்றிக் கொண்டார்கள்? என்ற விளக்கத்தை முன்வைக்கிறது.

இருளை கீறிக் கிழித்துக்கொண்டு ஒளிப்பிழம்பாய் வரும் கதிரவன் போல

எப்படி தன்னுடைய தெளிவற்ற குழப்பங்களும் சந்தேகங்களும் நிறைந்த சிந்தனைகளுக்கு வழிகாட்டி அவற்றுக்குத் தடையாய் திரையாய் அமைந்த அனைத்தையும் சத்தியம் ஒளியூட்டியது என்பதனை விளக்குவதை இந்நூலில் காணலாம்.

அவ்வாறே அகீதா துறையில் அதிகம் பேசிய இமாம் அல் அஷ்அரி…எப்படி

தன்னுடைய நிலைப்பாடுகளை அலசி ஆராய்கின்றார் என்பதனைய இபானா எனும் நூல் வழியாக காணலாம்…

தன்னைச் சூழ நான்கு சுவர்களில் எழுப்பிக் கொண்டு அதற்குள்ளால் மாத்திரம் உலகை பார்ப்பதனை விட தனக்கு வெளியில் இருக்கும் புறச்சூழலையும் உற்று நோக்கி அவதானிக்கின்ற பொழுது தான் தன்னுடைய கருத்துக்கள் சிந்தனைகள் விரிவடையும். விசாலமடையும். என்பதனை தான் இவர்கள் எமக்கு சொல்லித் தருகின்றார்கள்

ஏன் அவ்வளவு இமாம் ஷாஃபி அவர்கள் கூட தன்னுடைய நிலைப்பாடுகளை கால சூழமைவுக்கு ஏற்ப எப்படி மாற்றிக் கொண்டார்கள் என்பதனை அவரை ஆழமாக வாசிக்கின்றவர்கள் புரிந்து கொள்வார்கள்
ஆனால் எமக்கு முன்னால் இருக்கின்ற பாரிய துரதிஷ்டம் என்னவென்றால் தாம் வகுத்த கொள்கைகளையே காலப்போக்கில் மாற்றிக் கொண்டு புதிய நிலைப்பாடுகளை உருவாக்கி தம்மை விடுவித்துக் கொண்டவர்களை உச்சியில் வைத்துக்கொண்டு கொண்டாடுகின்றவர்கள் அவர்களுடைய இத்தகைய நெகிழ்வுத் தன்மைகளை விசாலமான பார்வையை பெறந்து பட்ட நோக்கி ஏன் அமல்படுத்துவது இல்லை என்பதுதான் முரணாக உள்ளது.

Popular

More like this
Related

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...