நளின், மஹிந்தானந்தவின் பிணை மனு ஒத்திவைப்பு

Date:

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெனாண்டோ ஆகியோர், தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, எதிர்வரும் செப்டெம்பர் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (25) உத்தரவை பிறப்பித்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​இலங்கை விளையாட்டு சம்மேளனம் மூலம் சதொச ஊடாக 14,000 கரம் பலகைகள், 11,000 டாம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ. 53 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.

குறித்த இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெனாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ ஆகியோர் தங்கள் சிறைத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், இறுதி முடிவு வரும் வரை தங்களை பிணையில் விடுவிக்கக் கோரி இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அனர்த்தங்களினால் முழுமையாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு காணிகளை நன்கொடையாக வழங்க சந்தர்ப்பம்

திட்வா புயல் தாக்கத்துடன் ஏற்ப்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக பெருமளவானோர் வீடு...

77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (26) தனது 77 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. அரசியலமைப்பை...

நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (25) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,  ஊவா மாகாணங்களிலும்...

கத்தாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கத்தார் இராச்சியத்தில் பணியிலிருந்த போது உயிரிழந்த இலங்கையர்களான இழப்பீட்டை அங்குள்ள இலங்கை...