அமைச்சரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது: இன்றும் தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

Date:

5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்வைத்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்றப்போவதில்லை என வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், கட்டாய கைரேகை மற்றும் கூடுதல் நேர வேலைநிறுத்தம் குறித்த முடிவை திரும்பப் பெற அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், முறையான ஒப்புதல் இன்றி பணிக்கு சமூகமளிக்காத அஞ்சல் அதிகாரிகளின் சம்பளம் விடுவிக்கப்படமாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு, சுகவீனம் விடுமுறை என்றால் அரச மருத்துவ சான்றிதழ்களைச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, தபால்  ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக சுமார் 100 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் ஊழியர்கள் 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17ஆம் திகதி நள்ளிரவில் தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...