நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

Date:

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான்  நேற்று (07) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் தெல்தோட்டை பிரதேசத்திற்குட்பட்ட மெடிஹென எனும் கிராமத்தின்  முஹம்மது சுல்தான் மற்றும் திருமதி சித்தி மர்லியா தம்பதிகளின் மகனாவார்.

கண்டி எனசல்கொல்ல மத்திய கல்லூரியில் தனது உயர்கல்வியை தொடர்ந்த இவர், பல்வேறு அரச நிறுவனங்களின் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

மத்திய மாகாண சபையின் பிரதான மற்றும் கல்வி அமைச்சில் சேவையாற்றி மத்திய மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு தனது உயர்ந்த பட்ச சேவையை வழங்கியிருந்தார்.

பின்னர் கம்பளை கல்விப் பணிமனையிலும் ஒரு சில மாதம்
ஆசிரியராகவும் பணியாற்றினார்.இறுதியாக இலங்கை பாராளுமன்றத்தில் பணியாற்றியிருந்தார்.

கடந்த 01ம் திகதி நுவரெலிய பிரதேச சபையின்(நானுஓயா) செயலாளர் பதவிக்கான நியமனக் கடிதத்தை மத்திய மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயாலாளரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...