பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நடவடிக்கைகள் பின்னர் அறிவிக்கப்படும்: சபாநாயகர்

Date:

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 31 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.

இந்த பிரேரணை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 31 எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கையொப்பங்களுடன் ஆகஸ்ட் 12 ஆம் திகதி பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

 

அதன்படி, சம்பந்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சேர்க்கப்பட்டுள்ள விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்காலத்தில் சபைக்கு அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி, மனைவி இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக...