முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

Date:

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அதன்படி காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை அருகே இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

அதில் சர்வதேச ஊடகமான அல்ஜசீராவில்  வேலை செய்யும் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

உயிரிழந்த செய்தியாளர்கள் அனாஸ் அல்-ஷெரிஃப், முகமது குரேய்கே மற்றும் ஒளிப்பதிவாளர்கள் இப்ராஹிம் ஜாஹர், மொமென் அலிவா, முகமது நௌஃபால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அல்-ஷிஃபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு வெளியே ஊடகங்களுக்குக் கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கூடாரத்தில் செய்தியாளர்கள் இருந்த நிலையில், அங்குத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மோசமான தாக்குதலில் தான் 5 செய்தியாளர்கள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.

தங்களது மரணம் நெருங்கிவிட்டதை உணர்ந்த அனஸ், மிக உருக்கமான இறுதிப் பதிவையும் முன்கூட்டியே அனுப்பியிருந்தார். அதில், இது எனது மிகவும் விருப்பமான மற்றும் இறுதித் தகவலாக இருக்கும். இந்த வார்த்தைகள் உங்களை அடைந்திருந்தால், இஸ்ரேல் எங்களைக் கொன்று எங்கள் குரல்களை அமைதியாக்கும் முயற்சியில் வெற்றிகண்டுவிட்டது என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

ஒரு சில நேரலை செய்திகளின்போது, தான் நேரில் பார்த்தவற்றை சொல்ல முடியாமல், உணர்ச்சிக் கொந்தளிப்புடன் அனஸ் கண்ணீர் விட்டு அழும் விடியோக்களும் வெளியாகியிருந்தன. காஸாவின் கோர முகத்தை அப்பட்டமாக வெளிஉலகுக்கு வெளிப்படுத்தி வந்த அனஸ், ஊடகத் துறையில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.

காஸாவின் ஜபாலியா அகதிகள் முகாமின் அன்றாட வாழ்க்கையை தொடர்ந்து உலகுக்குப் பதிவு செய்து வந்த அனஸ், ஒருநாளும் உண்மையை உரக்கச் சொல்வதற்குத் தான் தயங்கியதில்லை.

இங்கிருக்கும் அனைத்து ரூபங்களின் வாயிலாகவும் வலியை மட்டுமே உணர்ந்திருக்கிறோம், தொடர்ந்து ஏற்பட் பெரும் இழப்புகளுக்கு சாட்சியாக நின்றிருந்தோம், முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம். அதை விட்டுவிடாதீர்கள். கைவிலங்குகள் உங்களை மௌனமாக்காது, எல்லைகள் யாரையும் தடுத்து நிறுத்தாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன்னுடைய தாய், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கும் உருக்கமான தகவலையும் பதிவு செய்திருக்கிறார். ஒருவேளை நான் இறந்துவிட்டால், எனது கொள்கைகளின் மீது நான் உறுதியாக நின்றிருக்கிறேன் என நினைத்துக் கொள்ளுங்கள். காஸாவை யாரும் மறந்துவிடாதீர்கள். உங்களது ஆத்மார்த்தமான பிரார்த்தனையின்போதும் என்னை மறந்துவிடாதீர்கள் என்று பதிவு செய்திருக்கிறார்.

Popular

More like this
Related

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பம் கோரல்!

க.பொ.த சாதாரண தர 2025(2026) பரீட்சை மீள் திருத்தம் செய்வதற்கு  எதிர்வரும்...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 72வது வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை கண்டியில் ..!

கடந்த 72 வருடகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் உழைத்துவரும்...

ஆன்மீகம் மற்றும் லௌகீக முன்னேற்றங்களுக்கு வழிகாட்டும் ஆஷூரா தின சிந்தனைகள்

அகீல் பின் ஸாலிம் அல்-ஷம்மரி (அரபு மூலம்) நன்றி- அல்-முஸ்லிம் இணையதளம் (குறிப்பு: இன்றைய...

சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி!

ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் மற்றும் அவர்...