முன்னாள் ஜனதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை ஆரம்பமாகவுள்ள நிலையில் சஜித் பிரமேதாச, முஜிபுர் ரஹ்மான் ,எஸ்.எம். மரிக்கார் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் நீதிமன்றுக்கு வருகை தருகின்றார்கள்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கக்கு எதிரான வழக்கு இன்று (26) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இவ்வாறான நிலையில், அவரது உடல்நிலை சீராக இல்லாத காரணத்தால் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாவது கேள்விக்குறியாகவே உள்ளது.
அதேவேளை நீதிமன்ற வளாகத்திற்கு பாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வருகை வந்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, அரசாங்கம் தொடர்ந்து ராஜபக்சக்களைப் பழிவாங்கி வருவதாகவும், இப்போது ராணில் மீது பழிவாங்குவது ஒரு புதிய சூழ்நிலையாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.