ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி சென்றிருந்ததாக வெளியான செய்திகள் போலியானது!

Date:

வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய சென்றிருந்ததாக வெளியான செய்திகள் போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஊடகப் பிரிவு, இது போலியான செய்தி என்பதை   உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (24) அதிகாலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றதாக  சிங்கள பிரதான ஊடகமான ‘ஹிரு’ செய்தி வெளியிட்டிருந்தது.

அதன்போது, முன்னாள் ஜனாதிபதி ரணிலின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுடன் பிரதமர் வந்திருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாமல், அவர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் செலவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது குறித்து எமது ஊடகம் பிரதமர் ஹரிணியின் ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டதையடுத்து அது போலியான செய்தி என உறுதிப்படுத்தப்பட்டது.

Popular

More like this
Related

அனர்த்தங்களினால் முழுமையாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு காணிகளை நன்கொடையாக வழங்க சந்தர்ப்பம்

திட்வா புயல் தாக்கத்துடன் ஏற்ப்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக பெருமளவானோர் வீடு...

77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (26) தனது 77 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. அரசியலமைப்பை...

நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (25) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,  ஊவா மாகாணங்களிலும்...

கத்தாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கத்தார் இராச்சியத்தில் பணியிலிருந்த போது உயிரிழந்த இலங்கையர்களான இழப்பீட்டை அங்குள்ள இலங்கை...